நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், " சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறோம்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை முன்னதாகவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது.