காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.