மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ், வழக்கின் ஆவணங்களை தனக்கு வழங்க உத்தரவிட என்று கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு தொடர்பாக சிபிஐ ஆவணங்களைக் கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.