தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு : தன்னையும் கொலை செய்ய முயன்றதாக காவல் ஆய்வாளர் பரபரப்பு கடிதம்

சாத்தான்குளம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தன்னையும் கொலை செய்ய முயன்றதாகவும் அது குறித்த சிசிடிவி காட்சி பதிவுகள் உள்ளதாகவும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு : தன்னையும் கொலை செய்ய முயன்றதாக காவல் ஆய்வாளர் பரபரப்பு கடிதம்
சாத்தான்குளம் வழக்கு : தன்னையும் கொலை செய்ய முயன்றதாக காவல் ஆய்வாளர் பரபரப்பு கடிதம்

By

Published : May 3, 2022, 7:48 PM IST

மதுரை:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணையின்போது கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் சில காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், தன்னை தவிர்த்து மற்ற 8 பேருமே கொலையை செய்ததாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ’சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தன்னைத் தவிர மீதியுள்ள எட்டு பேரான ஏ2 முதல் ஏ 9 வரை குற்றம் சட்டப்பட்டவர்களே ஜெயராஜ், பென்னிக்சை அடித்துக் கொன்றனர் என்றும், ஏன் அவர்களை சாகும் வரை அடித்துக் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு, தன்னை மார்ச் 26ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சிறையில் கொலை செய்ய முயற்சித்ததாகவும்’ தெரிவித்துள்ளார்.

மேலும், கொலை முயற்சி செய்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது என்றும், இதனடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதிக்கு ஸ்ரீதர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டிரம்ஸ் வாசிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details