மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். இதில், சாத்தான்குளம் காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 'சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கின்றோம். எங்களுக்கு பிணை வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவோம் ஆகவே, இந்த வழக்கில் எங்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: காவலர்கள் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு! - மதுரை மாவட்ட செய்திகள்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுவில் பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ கால அவகாசம் கோரியதால் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்து வைத்துள்ளது.

காவலர்கள் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்தி வைப்பு
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கை பிப்ரவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: வனத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!