தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் காவலர்களை அழைத்துவந்த வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக, அவர்கள் வந்த வாகனம் மாவட்ட நீதிமன்றம் அருகே விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட காவலர்கள்
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட காவலர்கள்

By

Published : Jul 14, 2020, 3:18 PM IST

சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரை சிபிஐ காவலில் எடுக்கக்கோரிய மனு மீதான விசாரணை இன்று மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் ஐந்து பேரும் மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். நீதிபதி முன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரையும் அழைத்து வந்த காவல் துறையினரின் வாகனம் நீதிமன்ற வளாகத்திலுள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட காவலர்கள்

இதனால், சிறிதுநேரம் நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. மேலும், அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீதும் வாகனம் மோதியது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நேரவில்லை.

இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

ABOUT THE AUTHOR

...view details