சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ள உதவி ஆய்வாளர் பால் துரை, கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பால் துரையின் மனைவி மங்கையர் திலகம், அரசு ராசாசி மருத்துவமனையில் இருந்து தனது கணவரை மாற்றம் செய்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை காவல்துறை ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.