தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்தில் வைத்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 காவலர்கள் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு, தற்போது சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. காவல் ஆய்வாளர் உள்பட எட்டு காவலர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, சிபிஐ அலுலவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, ஸ்ரீதருக்கு திடீரென முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டதால், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.