தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறைக் காவலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, தந்தை, மகன் கொலை விவகாரத்தில், ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (ஜூலை 4) மாலை 5.15 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் ஆய்வாளர் பார்த்திபன் இரண்டு சார்பு ஆய்வாளர்கள் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் 10 காவலர்கள் பாதுகாப்புடன் ஆய்வாளர் உள்பட ஐந்து பேரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 4,280 பேருக்கு கரோனா: ஒரு லட்சத்து ஏழாயிரமாக உயர்ந்த பாதிப்பு!