சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக காவல் ஆய்வாளர் உள்ளார். குற்றவாளிகளை தாக்கியதில் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் காவல் ஆய்வாளராக இருப்பதால் ஜாமீன் கொடுத்தால் வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடும் எனக் கூறினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐயின் வாதம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளதால், ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சில வழிகாட்டுதல்களையும் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் விசாரணை உயிரிழப்பு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.