மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள், தெருக்கள் ஆகியவற்றைக் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டு, அவை காவல் துறையின் முழு கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
மதுரை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு, தபால் தந்தி நகர் ஆகிய பகுதிகளும், மதுரை புறநகரில் மேலூர், எழுமலை, திருமங்கலம் ஆகிய பகுதிகளும் காவல் துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான மேலமடை, மருதுபாண்டியர் நகரின் குறிப்பிட்ட சில தெருக்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் நவீன ட்ரோன் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.