தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடினார் என்பது பொய்!’ - பசும்பொன்பாண்டின் - nirmala devi

மதுரை: பேராசிரியர் நிர்மலா தேவி மகளிர்தின விழா கொண்டாடியதாக சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிடுள்ளதாக வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்

By

Published : Mar 11, 2019, 11:28 PM IST

மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை சந்திக்க வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் அங்கு சென்றிருந்தார்.

பேராசிரியர் நிர்மாலா தேவியைச் சந்தித்விட்டு வந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக சிறை நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துவந்தனர்.

ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதால், நிர்மலா தேவியை நேரில் ஆஜர்படுத்த நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவிக்கு அதிக அளவில் மனரீதியான துன்புறுத்தல்களை கொடுத்துள்ளனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்

நிர்மலா தேவியை நேரில் சந்திக்கச் சென்றபோதும், காவல் அதிகாரிகள் அருகில் வந்து நின்று கொண்டார்கள். இருப்பினும், நாளை நடைபெறவுள்ள விசாரணையில் நீதிபதியிடம் தைரியமாக உண்மையை சொல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறேன்.

மேலும் எனக்குத் தெரிந்தளவில், கடந்த 8 மாதங்களாக வெளியில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் நிர்மலாதேவிக்கு தெரியவில்லை, செய்தித்தாள்கள் கூட வழங்கப்படவில்லை என நினைக்கிறேன். மகளிர் தினம் கொண்டாடினார் நிர்மலா தேவி என்று சிறை நிர்வாகம் கூறியதும் பொய்தான்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details