மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தேனூர் மெயின் ரோட்டில் அரசு மதுபான மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சேர்ந்து தாக்கவுள்ளதாக காவல்துறையினருக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த கடைக்கு 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபான கடை உடைக்கப்படும் என வதந்தி - காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு - solavanthan
மதுரை: சோழவந்தான் அருகே உள்ள டாஸ்மாக் கடை அடித்து உடைக்கப்படும் என வதந்தி பரவியதால் டாஸ்மாக் கடைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு்ள்ளது.
மதுபான கடை உடைக்கப்படும் என வதந்தி
இதனால், அங்கு குடிமகன்கள் யாரும் வராததால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பின்னர் அது வெறும் வதந்தி என தெரிய வந்ததால் காவல்துறையினர் திரும்பி சென்றனர்.