தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இதுவரை மூன்று ஆணவ படுகொலைகளுக்கு மட்டுமே தீர்வு - 'எவிடன்ஸ்' கதிர் குற்றச்சாட்டு - madurai

மதுரை : தமிழ்நாட்டில் நடைபெற்ற 187 ஆணவ படுகொலைகளில், இதுவரை மூன்று படுகொலைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது என 'எவிடன்ஸ்' கதிர் கூறியுள்ளார்.

ஆணவ படுகொலை

By

Published : May 19, 2019, 10:59 AM IST

மதுரையில் "ஆணவ படுகொலை, ஆணவ படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்" என்ற தலைப்பில் மதுரை லேடி டோக் பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்ற அமைப்பினர் கலந்துக்கொண்டு, மாநிலத்தில் நடைபெறும் ஆணவ படுகொலை, அதற்கு உண்டான தீர்வு குறித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து , செய்தியாளர்களை சந்தித்த எவிடென்ஸ் கதிர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் தற்போது வரை மூன்று ஆணவ படுகொலைகளுக்கும் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், இன்னும் பல ஆணவ படுகொலைகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலும், சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்திய அளவில் ஆணவ படுகொலைகளில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

ஆணவ படுகொலைகளில் இதுவரை மூன்று படுகொலைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது

ஆனால் இதனை தடுக்க அரசு சிறு துளி அளவு கூட செயல்படாமல் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றவதுடன், ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details