மதுரை சட்டப்பேரவைக்குட்பட்ட திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று தினங்களுக்கு முன்பாகவே டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் , மதுரை - சிவகங்கை எல்லையில் உள்ள புலியூர் என்ற கிராமத்தில் தேர்தல் அதிகாரியின் உத்தரவை மீறி நேற்று மதுக்கடையை திறந்து வைத்துள்ளனார்.
டாஸ்மாக் கடையில் காவல்துறையினர் தடியடி
மதுரை : காவல்துறையினர் மதுக்கடையை மூடி மதுபிரியர்கள் மீது தடியடி நடத்தியதால், புலியூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இடைத்தேர்தலுக்கு உட்பட்ட மற்ற பகுகிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், புலியூர் கிராம மதுக்கடையில் காலையிலிருந்து மது பிரியர்கள் அங்கு வரிசையில் நின்று மதுவாங்கி சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது வாங்குவதற்காக அங்கு குவிந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , மதுக்கடையை மூடும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடையை மூடினர். இருப்பினும் மது பிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்ததால் சிறிய அளவு தடியடி நடத்தி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.