மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மதுரை காவல் துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! - பறிமுதல்
மதுரை: விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1,500 புகையிலைப் பொட்டலங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tobacco
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அதிரடியாக கடையில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 1,499 புகையிலைப் பொட்டலங்கள், இரண்டாயிரத்து 650 ரூபாய், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காளவாசல் பகுதியைச் சேர்ந்த சண்முக கனி, இலட்சுமணன், சுரேந்தர் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.