திருபரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
மோடியை வீட்டிற்கு அனுப்ப திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளீர்கள்- ஸ்டாலின்
மதுரை: மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த பகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்கு அளித்து உள்ளீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்பதை அறிந்து தான் எடப்பாடி பழனிசாமி 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதற்காக தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.