மதுரையில் நேற்று இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய அவதாரங்களில் அழகர் தோன்றினார். (தசாவதாரம் என்பது 10 அவதாரம் என்பதாகும்)
மதுரையில் நடைபெற்ற தசாவதாரம் - alagar
மதுரை: விடிய விடிய நடைபெற்ற முத்தங்கி சேவை, மச்சவதாரம் உள்ளிட்ட தசாவதார நிகழ்ச்சியை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர்.
7 அவதாரங்களில் தோன்றும் காட்சிகளே இன்று நடைபெற்றது. பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து தசாவதார நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் வணங்கினர். ராமராயர் மண்டபத்தில் இருந்து இன்று நண்பகல் அனந்தராயர் பல்லக்கில் ராஜகோலத்துடன் புறப்பட்ட அழகர், கோரிப்பாளையம் வழியாக மக்களுக்கு காட்சி கொடுத்து இன்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார். ஏப்ரல் 22ஆம் தேதி அதிகாலையில் பூப்பல்லக்கில் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயில் சந்நிதியில் எழுந்தருளுகிறார்.