தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் பணம் பறிக்கும் பணியாளர்கள்: இணையத்தில வைரலாகும் வீடியோ! - ராஜாஜி மருத்தவமனை

மதுரை: அரசு மருத்துவமனையில் மகப்பேறு முடிந்து வீடு திரும்பும் தாய்மார்களின் உறவினர்களிடம் மருத்துவமனை பணியாளர்கள் பணம் பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

By

Published : Apr 3, 2019, 10:02 PM IST

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் உறவினர்களிடம், அம்மருத்தவமனையில் இயங்கி வரும் சீமாங்கு என்னும் தனி பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளது.

அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கும் பணியாளர்கள், ஆண் குழந்தைக்கு 1000 ரூபாய், பெண் குழந்தைகளுக்கு 500 ரூபாய் பணம் என 20 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுவந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது மகப்போறு வார்டில் பணியாற்றும் அந்த தனியார் ஒப்பந்த ஊழியர்கள், சிகிச்சை முடிந்து வெளியே செல்பவர்களிடம் பணம் பெறுவது போன்ற புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று.

மதுரை அரசு மருத்துவமனை

ABOUT THE AUTHOR

...view details