தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே இடிந்து விழுந்த சுவர் - wall collapsed

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் கட்டட வசதிக்காக தோண்டப்பட்ட  பள்ளம் காரணமாக, 60 அடி நீள காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

wall collapsed

By

Published : Apr 3, 2019, 3:47 PM IST

மத்திய அரசின் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக கார் பார்க்கிங் வசதிக்காக 14 ஏக்கர் நிலத்தில், 40 கோடியே 19 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது. அதில், கட்டட பணிக்காக 40 அடி வரை தோண்டியதில் அந்த இடத்தின் அருகே இருந்த சப்பாணி கோவில் தெருவில் இருக்கும் பொது சுவர் போதுமான பிடிப்புத்தன்மை இல்லாததால் இடிந்து விழுந்தது.

அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் அருகே இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியைடைந்த பொதுமக்கள் கட்டுமான பணியின்போது முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி பணியை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


ABOUT THE AUTHOR

...view details