தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழன்னை சிலைக்கு பாஜகவினர் காவி மாலை! - saffron wrappers tamil annai statue

மதுரை: தமுக்கம் மைதானம் முன்பு உள்ள தமிழன்னை சிலைக்கு பாஜகவினர் காவி துண்டால் மாலையைச் சுற்றி அணிவித்துள்ளனர்.

தமிழன்னை சிலைக்கு காவி மாலை
தமிழன்னை சிலைக்கு காவி மாலை

By

Published : Aug 28, 2020, 10:37 PM IST

மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தற்போது பல்வேறு பிரிவுகளுக்குப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர்.

தமிழ் வளர்ச்சிப் பிரிவுக்கும் தற்போது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது சதீஷ் ஆசாத் என்பவர் தமிழ் வளர்ச்சிப் பிரிவுக்கான மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கண்ணன், சக்தி ஆகியோர் இன்று (ஆக.28) மதுரை தமுக்கம் மைதானம் முன்புறம் உள்ள தமிழன்னை சிலைக்கு மரியாதை செய்யும்விதமாக மாலை அணிவித்தனர். இந்த மாலையை காவி துண்டால் சுற்றி தமிழன்னை சிலைக்கு அணிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு; கரோனாவைவிட மோசமான விஷக்கிருமிகள்'

ABOUT THE AUTHOR

...view details