தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மக்கள் அவதி!

மதுரை: அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாமல் நடத்தப்பட்டதாலும் கனமழை பெய்து தண்ணீர் தேங்கியதாலும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

By

Published : Nov 7, 2020, 3:49 AM IST

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி
அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் சார்பில் பயனாளிகளுக்கு 45.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட வழங்கல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முன்னதாக, நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இடத்தில் இன்று அதிகாலைமுதலே பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாற்று இடத்தில் பயனாளர்களை கூடைப் பந்து மைதானத்தில் சிமெண்ட் தரையில் சமூக இடைவெளி இல்லாமல் அமரை வைக்கும் நிலை ஏற்பட்டது.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி

அங்கேயும் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மேலும் பயனாளிகள் தங்களுடைய பெருள்களை பெறுவதற்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததால் நகராட்சி ஊழியர்களை வைத்து விழா நடக்கும் போதே தண்ணீர் அகற்றும் பணி நடைபெற்றது. அரசு நிகழ்ச்சியில் பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்பி உதயகுமார், "ராணுவத்தில் கூட பத்து நிமிடங்களில் சாலை போட முடியாது. இந்தநிலையில் பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக நகராட்சி பணியாளர்களை கொண்டு மக்கள் தண்ணீரில் நடந்து செல்லாமல் இருக்க, நலத்திட்ட உதவிகள் பெற்றுசெல்ல ஏதுவாக சாலை அமைத்துள்ளோம்" என்று கூறினார். அப்போது கூட்டத்தில் சிரிப்பலை ஏறப்பட்டது.

வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details