தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பராமன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "நான் அரசு ஓய்வுபெற்ற அலுவலர். ஆர்.டி.ஐ. மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளேன். தூத்துக்குடியில் பல்வேறு நிலப் பிரச்சினைகளை ஆர்.டி.ஐ. மூலம் தீர்த்துவைத்திருக்கிறேன்.
ஆர்.டி.ஐ. குறித்து 'Success Story of Right to Information Act' என்ற நிகழ்ச்சியில் எனக்கு விருது வழங்கப்பட்டது. எனவே, ஆர்.டி.ஐ. சம்பந்தமாக எனது தகவல்களைச் சென்னை மேலாண்மை நிலையத்தில் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடக் கோரி, தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளேன்.
ஆனால், எனது மனு தற்போதுவரை நிலுவையில் உள்ளது. எனவே, நான் அனுப்பிய மனுவைத் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் பரிசீலனைசெய்து, ஆர்.டி.ஐ. புத்தகத்தை வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் புதிய மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும். மனு மீது சட்டரீதியாகத் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்துவைத்தார்.
இதையும் படிங்க:'செம்மண் ஆன செமன்'- பாலியல் குற்றவாளியின் தீர்ப்பை திருத்தி எழுதிய உயர்நீதிமன்றம்!