இதுகுறித்து தென்னக ரயில்வே, நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை மட்டும் ரயிலில் பயணச்சீட்டுயில்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.5.63 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாத சோதனைகள் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் உத்தரவின் பேரில், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா, கோட்ட வர்த்தக மேலாளர் எம். பாரத்குமார், உதவி வர்த்தக மேலாளர் நிறைமதி எழிலன் பிள்ளைக்கனி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டன.
ரயிலில் பயணச்சீட்டின்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து மட்டும் ரூ.5.63 கோடி வசூல் - பயணச்சீட்டுயில்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.5.63 கோடி வசூல்
மதுரை: நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.5.63 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதில் ஜனவரி மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 89 ஆயிரத்து 917 நபர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூபாய் 5.63 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 49 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டு ஜனவரி மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதத் தொகையாக ரூபாய் 3.77 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது. எனவே இந்த நிதியாண்டில் பயணச்சீட்டுயில்லாமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைத்ததை கண்டித்து காங். போராட்டம்