மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் - நூதன முறை
மதுரை: விமானம் மூலம் துபாயிலிருந்து வந்த பயணியிடம் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.9. 51 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அனிபா என்பவரது மகன் சேக் அலாவுதீன் (வயது 40 ) என்பவரது கைப்பையில் உள்ள ஜீன்ஸ் பேன்டில் ரூபாய் 9 லட்சத்து 51ஆயிரம் மதிப்புள்ள தங்க செயின் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து தங்க செயினை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அவர் துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் கொழும்பு வந்து பின்னர் அங்கிருந்து மதுரை வந்ததாக விசாரணையில் தெரிகிறது.