மதுரை மாவட்டம், மேலக்கோட்டை விளக்கு அருகே தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி மணிமாறன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக மதுரையிலிருந்து பணத்துடன் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டர். அப்போது காரில் ரூ.1.35 கோடி இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணம் இன்றி சென்றதால் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி! - ஸ்டேட் பேங்க் ஏடிஎம்
மதுரை: மேலக்கோட்டை விளக்கு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.35 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
மதுரையில் 1.35 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், ரூ.1.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.