மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார், முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார்.
'தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும்' - ஆர்.பி. உதயகுமார் - ஆர்.பி. உதயகுமார்
மதுரை: தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "தென்மாவட்ட மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திகழ்ந்து வருகின்றனர். இந்த நான்காண்டு காலத்தில் பல ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட நலத்திட்டங்களை தென்மாவட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். தற்போது சூழ்நிலையில் மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.
ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமையவுள்ளன. அந்த வகையில், மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் முடிவு எடுத்தால் தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். அதுமட்டுமல்லாது மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை அமைந்துள்ளது. சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது தலைநகரம் அமைக்க வேண்டும்" என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.