தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடுதலாக 2 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தால் அதிமுகவே அரசு அமைத்திருக்கும் - ஆர் பி உதயகுமார்

கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் ஆளுநர் உரையில் அது குறித்து சுட்டிக் காட்டப்படவில்லை கடந்த காலத்தில் லாக்கப் மரணம் ஏற்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதி விசாரணை தொடங்கப்படும் என்று கூறிய பிறகும் சிலர் கண்டனக் குரல் எழுப்பினர்.

RP udayakumar
RP udayakumar

By

Published : Jul 5, 2021, 5:05 AM IST

மதுரை: அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். கூடுதலாக 2 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தால் அதிமுக ஆட்சி மலர்ந்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அம்மா கோவிலில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஐ.தமிழழகன் தலைமை தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் ஜெ பேரவை செயலாளருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் மக்கள் நமக்கு வாக்களித்தார்கள் நமக்கும் திமுகவிற்கும் 1,98,369 வாக்குகள் தான் வித்தியாசம். சென்னை தி.நகர் தொகுதியில் 137 வாக்குகளும், தென்காசி தொகுதியில் 370 வாக்குகளும், காட்பாடியில் 746 வாக்குகளும், நெய்வேலியில் 925 வாக்குகள் வித்தியாசம் தான். இப்படித்தான் மிகக் குறைந்தளவில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

இதை புள்ளி விவரத்துடன் நான் கூறுகிறேன் 1தொகுதியில் 140 வாக்குகளும், 1 தொகுதியில் 400 வாக்குகளும்,3 தொகுதிகளில் 1000 வாக்குகளும், ஏழு தொகுதிகளில் 2000 வாக்குகளும், மூன்று தொகுதிகளில் 3,000 வாக்குகளும், மூன்று தொகுதிகளில் 4000 வாக்குகளும்,11 தொகுதிகளில் 5000 வாக்குகளும் இப்படி 29 தொகுதியில் மட்டும் 86,490 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தோம்

அதேபோல் 4 தொகுதிகளில் 7,000 வாக்குகளும், 4 தொகுதிகளில் எட்டாயிரம் வாக்குகளும், இரண்டு தொகுதிகளில் 9000 வாக்குகளும்,. 4 தொகுதிகளில் 10,000 வாக்குகளும் இந்த 12 தொகுதியில் மட்டும் 1,18,879வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்

ஆகமொத்தம் இந்த 43 தொகுதிகளில் 1,98,369 வாக்குகள் ஆகும் இதில் 2 லட்சம் வாக்குகள் பெற்று இருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சியில் அமர்ந்து இருப்போம். ஆனால் நமக்கும், திமுகவிற்கும் 3 சதவீத வாக்கு வித்தியாசம் என்று கூறுகிறார்கள் அதில் சில தொகுதிகளில்தான் அதிகமாக வாக்குகளை திமுக பெற்றுள்ளது.

கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் ஆளுநர் உரையில் அது குறித்து சுட்டிக் காட்டப்படவில்லை கடந்த காலத்தில் லாக்கப் மரணம் ஏற்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதி விசாரணை தொடங்கப்படும் என்று கூறிய பிறகும் சிலர் கண்டனக் குரல் எழுப்பினர். ஆனால், இன்றைக்கு முருகேசன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். அன்றைக்கு கண்டன குரல் எழுப்பியவர்கள் வெறும் குரல் கூட எழுப்பவில்லை.

60 நாட்கள் ஆகியும் மக்கள் மீது கவனம் செலுத்தாமல் குறிப்பாக தடுப்பூசி மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி அரசு விவாதம் நடத்துகிறது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு இல்லாத அறிவாற்றல், ஞானோதயம் தற்போது பிறந்த ரகசியம் என்ன? நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. இதை நிறைவேற்றவில்லை என்றார்.

ABOUT THE AUTHOR

...view details