மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாட்சா. இவர் இன்று அதிகாலை மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள ஆட்டோ நிலையம் அருகே கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களோடு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
தூங்காநகரில் அதிகாலை நிகழ்ந்த படுகொலை: ரவுடி பாட்சாவை கொன்றது யார்? - அதிகாலையில் வெட்டி படுகொலை
மதுரை: இன்று அதிகாலை ரவுடி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
![தூங்காநகரில் அதிகாலை நிகழ்ந்த படுகொலை: ரவுடி பாட்சாவை கொன்றது யார்? Rowdy hacked to death in the morning at madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10866240-707-10866240-1614856075198.jpg)
Rowdy hacked to death in the morning at madurai
இது குறித்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், பாட்சாவின் சடலத்தைக் கைப்பற்றி மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் வெட்டுக்காயங்களோடு இறந்துகிடந்த பாட்சா என்பவர் மீது, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் ஏற்கனவே கூட்டு கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.