தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 10, 2019, 10:16 PM IST

ETV Bharat / state

இடிந்து விழும் கால்நடை மருத்துவமனை மேற்கூரை - அச்சத்தில் மருத்துவர்கள்!

மதுரை: பாலமேடு அரசு கால்நடை மருத்துவமனையின் கட்டடம் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் அறைக்கு வெளியில் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

veterinary hospital
veterinary hospital

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடத்தின் பல பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. அடிக்கடி மேற்கூரையும் பெயர்ந்து விழுகிறது. இதனால் உயிர் பயத்துடன் மருத்துவர்கள் கட்டடத்துக்கு வெளியே நின்றவாறு கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது, மருத்துவர், ஊழியர்கள் வெளியில் கால்நடைக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை இம்மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் உயர் அலுவலலர்களுக்கு முறையிட்டுள்ளனர். ஆனால் கட்டடம் சீரமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இடிந்து விழும் கால்நடை மருத்துவமனை மேற்கூரை

இந்நிலையில் அடுத்தமாதம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நடைபெற உள்ளதால் காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு இந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துவருவது வழக்கம்.

எனவே, இந்த கட்டடத்தை இடித்துவிட்டு தற்காலிகமாக வேறு கட்டடத்தில் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களும், அப்பகுதி பொதுமக்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயிகளை அலட்சியப்படுத்தும் ஆர்.பி. உதயகுமார்: திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details