தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்காநத்தம் அருகே கோயிலில் கொள்ளை: காவல் துறை விசாரணை - Palanganatham Gothandramar Temple

மதுரை: பழங்காநத்தம் அருகே உள்ள கோதண்டராமர் கோயிலில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை
மதுரை

By

Published : Oct 9, 2020, 12:07 PM IST

மதுரை பழங்காநத்தம் அருகே அக்ரஹாரம் பகுதியில் அமைந்து உள்ளது, கோதண்டராமர் கோயில். இது அப்பகுதியில் மிகவும் பிரபலமான கோயிலாகும்.

நேற்றிரவு(அக்.08) வழிபாட்டிற்குப் பிறகு கோயில் மூடப்பட்டது. கோயில் பூசாரி இன்று(அக்.09) காலையில் வந்து பார்த்தபோது கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த பொருள்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுப்ரமணியபுரம் காவல் நிலைய காவலர்கள், கோயில் நிர்வாகிகளிடமும் அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் பழங்காநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details