மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் தெற்கு மாரட் வீதி பகுதியில் அரிசிக்கடை நடத்திவருகிறார். சம்பவத்தன்று தங்கப்பாண்டி வழக்கம்போல் பணத்தை கல்லாவில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இரவு நேரத்தில் அரிசிக்கடையை துளையிட்டு கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் உள்ளே இருந்த கல்லாவை உடைத்து அதிலிருந்த 84 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அரிசிக்கடையை துளையிட்டு 84 ஆயிரம் ரூபாய் திருட்டு! - கண்காணிப்பு கேமரா
மதுரை: மாட்டுத்தாவணி பகுதியில் அரசிக்கடையை துளையிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் 84 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இந்தக் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவில் சிக்கிய திருடன்
இந்நிலையில், காலையில் கடைக்கு வந்த தங்கப்பாண்டி, சுவரை துளையிட்டு பணம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தெற்குவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாகக் கொண்டு பணம் திருடியவரை தேடிவருகின்றனர்.