கரோனா தொற்று மக்களிடம் பரவாமலிருக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போனது. இதனால் காட்டு விலங்குகள் சாதாரணமாக வெளியே உலாவத் தொடங்கியுள்ளது. மக்களுடன் வாழ்ந்த உயிரினங்களும் உணவின்றி வெளியே திரிவதும், இறப்பதுமாக உள்ளது.
மதுரை வைகை ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள பழமையான ஏ.வி.மேம்பாலத்தில் நடந்து சென்ற எருமை மாடு பாலத்தில் இருந்து, தவறி பாலத்தின் கீழே உள்ள கழிவு நீர் ஓடையில் விழுந்தது.