தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருது பாண்டியர்களை முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களாக அறிவிக்க வலியுறுத்தல் - ஒன்றிய அரசிற்கு கோரிக்கை

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என மாமன்னர்கள் மருது பாண்டியர்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாமன்னர் மருதுபாண்டியர் கலை இலக்கிய குழு கோரிக்கைவைத்துள்ளனர்.

மருது பாண்டியர்களை முதல் சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்க வேண்டும் - ஒன்றிய அரசிற்கு கோரிக்கை
மருது பாண்டியர்களை முதல் சுதந்திர போராட்ட வீரர்களாக அறிவிக்க வேண்டும் - ஒன்றிய அரசிற்கு கோரிக்கை

By

Published : Jan 19, 2022, 7:02 PM IST

மதுரை:வருகிற ஜனவரி 26ஆம் நாள் அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி செல்ல பாதுகாப்புத் துறை வல்லுநர் குழு அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக மதுரை பத்திரிகையாளர் சங்கத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் கலை இலக்கியக் குழு சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

மத்திய அரசின் செயல் ஏமாற்றத்தை அளிக்கிறது

இந்த அமைப்பின் நிறுவனர் ஜெயமணி பேசுகையில், ”குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதி, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம் பெறுவது மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட தியாகி மாமன்னர் மருதுபாண்டியர் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுரையில் மட்டும் 100 கோடி ரூபாய் கல்விக் கடன் - சு.வெங்கடேசன்

ABOUT THE AUTHOR

...view details