மதுரை: ஊர்மெச்சி குளத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆறுமுகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 5 தென் மாவட்டங்களுக்கு நீராதாரம் வைகை இருந்து வருகிறது. இந்த வைகையில் இருந்து பரவை- ஊர்மெச்சி குளம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய்க்கு கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது.
இந்நிலையில் கால்வாய் பகுதிகள் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பினால் நீர்வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஊர்மெச்சிகுளம் கால்வாய் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடிட்ருந்தார்.