மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ளது புதுமண்டபம். இங்கு அழகுப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட 300 கடைகள் செயல்பட்டுவருகின்றன. அறநிலையத் துறை சார்பில் மண்டபத்தைப் புரனமைப்புச் செய்யப்போவதாகக் கூறி, கடைகளை அகற்ற வேண்டி வியாபாரிகளிடம் கடந்தாண்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் வியாபாரிகளுக்கு புதுமண்டபம் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு 161 கடைகள் மட்டும்தான் உள்ளன என்றும், 300 கடைகளுக்கு இடம் போதாது எனவும் மாநகராட்சி அலுவலர்களிடம் வியாபாரிகள் கோரிக்கைவிடுத்திருந்தனர்.