இந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில், "சில சாதிய ரீதியான அரசியல் கட்சிகள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இதற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு 2002ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்தது. வாக்கு பாதிப்பதாகக் கருதி, அச்சட்டத்தை திரும்பப் பெறப்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்தி சில அமைப்புகள் தேச நலன், ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுகின்றன. எனவே மதமாற்றத்தை தடை செய்யும் சிறப்புச்சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மதமாற்றத்தை தடை செய்யும் சிறப்புச்சட்டம் கொண்டுவரக் கோரிய மனு தள்ளுபடி! - Madurai branch of the High Court dismissed a petition calling for a ban on conversion
மதுரை: மதமாற்றத்தை தடை செய்யும் சிறப்புச்சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
court
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க:கனிமொழிக்கு எதிரான தமிழிசையின் வழக்கு: உயர்நீதிமன்றம் அனுமதி!