தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூழ்நிலைகளைப் பொறுத்து ஊரடங்கு தளர்த்தப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - ஊரடங்கு

மதுரை: சூழ்நிலைகளைப் பொறுத்து தமிழ்நாட்டில் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவுசெய்வார் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்
அமைச்சர் ஆர் பி உதயகுமார்

By

Published : Apr 23, 2020, 1:36 PM IST

மதுரையில், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் தங்கவைக்கப்பட்டுள்ள பூங்கா முருகன் கோயில் வளாகத்திலுள்ள ஷஷ்டி மண்டபத்தில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று ஆய்வுமேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

"பொதுமக்கள் அனைவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவையும், மருத்துவக் குழுவினர் அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடித்தால் மிக விரைவிலேயே கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியும்.

ஆகையால் பொதுமக்கள் தாமாக முன்வந்து இந்த ஊரடங்கு உத்தரவை, தகுந்த இடைவெளி, சுய தனிமை, முதலமைச்சரின் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற அறிவுறுத்தலைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிற மாநிலங்களைக் காட்டிலும் கரோனா தடுப்புப் பணிகளுக்காகக் கூடுதல் நிதியை, மத்திய அரசிடமிருந்து முதலமைச்சர் எடப்பாடி பெற்றுள்ளார். இது பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஊரடங்கு உத்தரவால் யாரும் பாதிக்கப்படாத வண்ணம் மாநில அரசு செயல்பட்டுவருகிறது. மதுரை மாநகரில் ஆதரவற்றோர், வீடு இல்லாத 410 பேர் ஹார்விப்பட்டி, பழங்காநத்தம் சமுதாயக்கூடங்கள், காக்கைபாடினியார் மாநகராட்சிப் பள்ளி, மதுரை பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு கடந்த மார்ச் 24ஆம் தேதிமுதல் தற்போதுவரை 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தினசரி மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.

அதேபோன்று மதுரை மாநகரிலுள்ள 15 அம்மா உணவகங்களின் மூலம் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்பட்டுவருகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள 9 பேரூராட்சிகளில் 302 நபர்களுக்கு மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

மதுரை மாவட்டத்தில் தற்போதுவரை 2 ஆயிரத்து 355 நபர்களுக்கு இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இரண்டாயிரத்து 236 நபர்களுக்கு 11 லட்சத்து 47 ஆயிரத்து 304 ரூபாய் மதிப்பீட்டிலும், இதர மருத்துவப் பொருள்கள் 321 நபர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் பார்க்க: கோவிட் 19: சீனாவுக்கு எதிராக கச்சை கட்டும் உலக நாடுகள்

ABOUT THE AUTHOR

...view details