தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிராமப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்' - ஆர்.பி. உதயகுமார்! - மதுரை கரோனா பாதிப்பு விவரங்கள்

மதுரை: 420 கிராமங்களுக்குக் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, விலைமதிப்பில்லா மக்கள் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'கிராமப் பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்' - ஆர்.பி. உதயகுமார்!
'கிராமப் பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்' - ஆர்.பி. உதயகுமார்!

By

Published : May 25, 2021, 7:26 PM IST

திருமங்கலம் தொகுதியிலுள்ள கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா தொற்று பாதிப்பில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ‌ அதனைத் தொடர்ந்து மதுரை 4ஆம் இடத்தில் உள்ளது.

மதுரையில் இதுவரை 57ஆயிரத்து182 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மதுரை மாவட்டம், சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களை பின்தள்ளி பாதிப்பில் முதல் இடத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் மதுரை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள், 420 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. கிராமப்புறங்களில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும். தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், "கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை கிராம மக்களுக்கு ஏற்படுத்த, சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்" என மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details