தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் ஸ்டாலின் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரவேண்டும்' - Minister R.B. Uthayakumar

மதுரை: எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில்தான் ஸ்டாலின் அமர வேண்டும் என திருமங்கலம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

madurai
madurai

By

Published : Jan 24, 2020, 11:11 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு தலைமை ஏற்றுப் பேசினார். அப்போது உரையாற்றிய அவர், ”ஜெயலலிதாவுக்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த ஆட்சியை கட்டிக்காத்துவருகிறார்கள். இதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை ஸ்டாலின் நடத்தியுள்ளார். எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அவர் எப்போதுமே எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கமுடியும். ஆளும் கட்சி வரிசையில் வர முடியாது. தொடர்ந்து நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதால் எதிர்க்கட்சியினர் வயித்தெரிச்சலுடன் இருப்பார்கள். இனிமேல்தான் கவனத்தோடு செயல்பட வேண்டும்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள 10 தொகுதிக்கும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சரிடமிருந்து பெறுவோம். அதைச் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிப்போம், உழைப்போம்! 2021இல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைப்போம்” என்றார்.

இதையும் படிங்க:'கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும்' - கே.எஸ். அழகிரி

ABOUT THE AUTHOR

...view details