மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் கலந்துகொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சியில் பேசுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.
இந்தியாவில் இருக்க கூடிய 29 பெரிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான ஆய்வில், இந்தியாவிலேயே இரண்டாம் மாநிலமாக தமிழ்நாடு பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்.