மதுரை:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றனர். இதில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசின் உள் துறைச் செயலர் உத்தரவிட்டிருந்தார்.
ரவிச்சந்திரனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் இந்த பரோல் வழங்கப்பட்டது. ரவிச்சந்திரன் நேற்று (நவ. 15) வெளிவருவார் என அறிவித்திருந்த நிலையில், சில பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (நவ. 16) விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து ரவிச்சந்திரனின் வழக்கறிஞர் திருமுருகன் கூறும்போது, “ரவிச்சந்திரனின் தாயார், உடல்நலக்குறைவு காரணமாக ரவிச்சந்திரனை, விடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு மீது விசாரணை செய்யப்பட்டு 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது.