தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டை போதுமானது’ - minister says about cooperative bank loan

மதுரை: கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டையே போதுமானது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

’கூட்டுறவு வங்கில் கடன் பெற குடும்ப அட்டைகள் போதுமானது’: அமைச்சர் செல்லூர் ராஜூ
’கூட்டுறவு வங்கில் கடன் பெற குடும்ப அட்டைகள் போதுமானது’: அமைச்சர் செல்லூர் ராஜூ

By

Published : Jun 5, 2020, 6:52 PM IST

மதுரையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

’கூட்டுறவு வங்கில் கடன் பெற குடும்ப அட்டைகள் போதுமானது’: அமைச்சர் செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: “கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் கடனுக்கான அரசாணை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட ஆயிரத்து 952 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டையே போதும். கடன் பெறுபவர்கள் சிறு, குறு வியாபாரிகளாக இருந்தால் போதும்.

கூட்டுறவு வங்கியில் கடன் இல்லையென்று சொன்னால் நான் நடவடிக்கை எடுக்கிறேன். 56 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் தொகை கூட்டுறவு வங்கிகளில் உள்ளது. பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கும் கடன் தொகையை அதிகரிக்க உத்தரவிட்டார். சிலர் எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டது விசாரணையில் தெரியவந்தது. எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி கொடுக்க முடியும். நியாயவிலைக்கடைகளில் குறைவாக அரிசி வழங்கினால், அதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம் தான். பொதுமக்களுக்கு தரமான அரிசியை கொள்முதல் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் மட்டுமல்ல மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:'மங்காத்தா சூதாட்டம்' போடும் அதிமுக அரசு - ஸ்டாலின் காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details