மதுரை: மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "தமிழ்நாட்டில் அரியவகை விலங்கான தேவாங்கு கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் குறைவாக இருப்பதால் தேவாங்கு வனப்பகுதியில் வாழ முடியாமல் அழிந்துவரும் சூழல் உருவாகியுள்ளது. வன விலங்குகளைப் பாதுகாக்க வனத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி, வன விலங்கான தேவாங்கைப் பாதுகாக்க வேண்டும்.
தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாட்டில் தேவாங்கு அதிகம் உள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்க கோரி உயர் அலுவலர்ககளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை இல்லை.
எனவே அரிய வகை வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தேவாங்கு அதிகமுள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.