தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் ரயில்கள் மண்டபத்தில் இருந்து புறப்படும் - தெற்கு ரயில்வே - rameswaram rail timings

பாம்பன் ரயில் பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரயில்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இவ்வழி செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ரயில்கள் நிறுத்தம்
பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ரயில்கள் நிறுத்தம்

By

Published : Dec 23, 2022, 6:23 PM IST

பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ரயில்கள் நிறுத்தம்

மதுரை:பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐஐடி நிறுவனம் பொருத்திய கண்காணிப்பு கருவி ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (23.12.22) மாலை 06.00 மணிக்கு புறப்படும் மதுரை விரைவு ரயில் (06656) முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இன்று ராமேஸ்வரத்தில் இருந்து முறையே மாலை 04.20, 05.20 மணிக்கு மற்றும் இரவு 08.20, 10.30 மணிக்கு புறப்படும் திருப்பதி, சென்னை எழும்பூர் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்), ஓஹா விரைவு ரயில்கள் ஆகியவை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் தொகுப்பு: வெள்ளை சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை.. ஓங்கும் கோரிக்கைகள்!

ABOUT THE AUTHOR

...view details