மதுரை: பரமக்குடி - சத்திரக்குடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வரும் ஜனவரி 1 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, வியாழக்கிழமைகள் தவிரவும், பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாலும் தற்போது ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம்
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Etv Bharat
பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவுபெற்றபின், மற்ற நாட்களில் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ETV Bharat 2022 Roundup: சென்னை விமானநிலையம் சந்தித்த சாதனைகளும் சோதனைகளும்