மதுரை:பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சேவை தற்போது மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
கோடை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயிலை தற்போது மார்ச் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் கோலாகலமான புத்தாண்டு கொண்டாட்டம்..! ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற இளைஞர்கள்!
அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஜனவரி 6 முதல் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கமாக ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் (07356), மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும். இந்த ரயில் ஜனவரி 7 முதல் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது.. பின்னணி என்ன?