தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம்-ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு - ஹூப்ளி சிறப்பு ரயில்

ஹூப்ளியில்- ராமேஸ்வரம் இடையே இயங்கி வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவையை நீட்டிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு-  தெற்கு ரயில்வே அறிவிப்பு
ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

By

Published : Sep 26, 2022, 10:40 PM IST

மதுரை: ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே இயங்கி வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவையை நீட்டிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ஹூப்ளி-ராமேஸ்வரம் ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரதிலிருந்து ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 02ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர் (பெங்களூர்), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதையும் படிங்க:நவராத்திரி முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details