தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் மார்ச் வரை நீட்டிப்பு!

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவையை வரும் மார்ச் வரை நீட்டித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 16, 2022, 5:30 PM IST

மதுரை:ராமேஸ்வரம்-ஹூப்ளி இடையேயான ரயிலின் சேவை ஏற்கனவே ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 26 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் சேவையை நீட்டித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 'ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 7 முதல் மார்ச் 25 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 8 முதல் மார்ச் 26 வரை ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பெண்ணூர், ஹரிஹர், தேவாங்கீர், சிக்ஜாஜுர், பிரூர், அரிசிகரே, தும்கூர், யஷ்வந்த்பூர், பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரயில்வே ட்ராக் மேன்களுக்கு ரட்சக் பாதுகாப்பு கருவி - எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details