தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சமூக மனநிலையைக் கலைகள் பிரதிபலிக்க வேண்டும்' - நிஜ நாடகவியல் அறிஞர் முனைவர் மு. ராமசாமி - முனைவர் மு ராமசாமி

மதுரை: ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், சமூக மனநிலையின் எதிரொலியாகவும் நாடகங்கள் உள்ளிட்ட கலைகள் திகழ வேண்டும் என்று நிஜ நாடகவியல் அறிஞர் முனைவர் மு. ராமசாமி கூறியுள்ளார்.

சமூக மனநிலையின் எதிரொலியே நாடகங்கள்
சமூக மனநிலையின் எதிரொலியே நாடகங்கள்

By

Published : Feb 19, 2020, 9:26 AM IST

Updated : Aug 9, 2022, 7:40 PM IST

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் சார்பாக, கல்லூரி வளாகத்திலுள்ள தெருக்கூத்து திறந்தவெளி அரங்கில் ’வகுப்பறை’ என்ற நாடகம், கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது. அதனை நெறியாளுகை செய்த முனைவர் மு. ராமசாமி, ”பல்வேறு வகையிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஏதேனும் ஒரு வகையில் புராண காலத்திலிருந்தே வஞ்சிக்கப்பட்டுதான் வருகின்றனர். நாம் நினைக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற உரிமையை இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியிருக்கிறது.

ஆனாலும் அந்த வஞ்சகத்திலிருந்து மீண்டெழுந்து மீண்டும் மீண்டும் சாதனை படைத்துக்கொண்டுதான் உள்ளனர். அதனை விளக்கும் முகமாய் இந்த நாடகப் பதிவு இருந்தாலும், வகுப்பறை என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வோடு அமைய வேண்டும்” என்றார்.

வகுப்பறையும், மாணவர் - ஆசிரியர்களுக்கிடையிலான புரிதலும் எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவிகள் இந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். கல்லூரியிலுள்ள பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் இந்த நாடகத்தில் பங்கேற்றனர்.

Last Updated : Aug 9, 2022, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details